தூது

திருக்குறள்:
 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் 
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

மு.வ உரை:
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல்
இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச்
செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும்
தூதரின் பண்பு.

ADVERTISEMENTS
Translation:
Integrity, resources, soul determined, truthfulness.
Who rightly speaks his message must these marks possess.

ADVERTISEMENTS
Explanation:
The
qualifications of him who faithfully delivers his (sovereign's) message
are purity, the support (of foreign ministers), and boldness, with
truthfulness in addition to the (aforesaid) three.