அமைச்சு

திருக்குறள்:
 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் 
பொருத்தலும் வல்ல தமைச்சு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அமைச்சருக்குரிய
ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப்
பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து
சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில்
காணப்படுவதாகும்.

மு.வ உரை:
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம்
உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும்
வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை:
நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப்
பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல்
காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக்
கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

ADVERTISEMENTS
Translation:
A minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.

ADVERTISEMENTS
Explanation:
The
minister is one who can effect discord (among foes), maintain the
good-will of his friends and restore to friendship those who have
seceded (from him).