அமைச்சு

திருக்குறள்:
 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு 
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அமைச்சரவை
என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக்
கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க
வேண்டும்.

மு.வ உரை:
அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை:
செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய
நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும்
உடையவரே அமைச்சர்.

ADVERTISEMENTS
Translation:
A minister must greatness own of guardian power, determined mind,
Learn'd wisdom, manly effort with the former five combined.

ADVERTISEMENTS
Explanation:
The
minister is one who in addition to the aforesaid five things excels in
the possession of firmness, protection of subjects, clearness by
learning, and perseverance.