ஒற்றாடல்

திருக்குறள்:
 ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் 
சொற்றொக்க தேறப் படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

மு.வ உரை:
ஓர்
ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர்
மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒற்றரை
இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக;
ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து
பிறகு ஏற்றுக்கொள்க.

ADVERTISEMENTS
Translation:
One spy must not another see: contrive it so;
And things by three confirmed as truth you know.

ADVERTISEMENTS
Explanation:
Let
a king employ spies so that one may have no knowledge of the other; and
when the information of three agrees together, let him receive it.