ஒற்றாடல்
திருக்குறள்:
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
ADVERTISEMENTS
மற்றவர்கள்
மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக்
கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும்
திறனாகும்.
மு.வ உரை:
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
ரகசியமாக
நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல்
படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே
ஒற்றர்.
ADVERTISEMENTS
A spy must search each hidden matter out,
And full report must render, free from doubt.
ADVERTISEMENTS
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.