கொடுங்கோன்மை

திருக்குறள்:
 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 
நாடொறும் நாடு கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆட்சியினால்
விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு
நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

மு.வ உரை:
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

சாலமன் பாப்பையா உரை:
நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

ADVERTISEMENTS
Translation:
Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.

ADVERTISEMENTS
Explanation:
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.