கொடுங்கோன்மை

திருக்குறள்:
 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் 
கோலொடு நின்றான் இரவு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆட்சிக்கோல்
ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப்
பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

மு.வ உரை:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
தண்டிக்கும்
இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக்
கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

ADVERTISEMENTS
Translation:
As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.

ADVERTISEMENTS
Explanation:
The
request (for money) of him who holds the sceptre is like the word of a
highway robber who stands with a weapon in hand and says "give up your
wealth".