பொச்சாவாமை

திருக்குறள்:
 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது 
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.

மு.வ உரை:
சான்றோர்
புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு
செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

ADVERTISEMENTS
Translation:
Let things that merit praise thy watchful soul employ;
Who these despise attain through sevenfold births no joy.

ADVERTISEMENTS
Explanation:
Let
(a man) observe and do these things which have been praised (by the
wise); if he neglects and fails to perform them, for him there will be
no (happiness) throughout the seven births.