காலமறிதல்

திருக்குறள்:
 செறுநரைக் காணின் சுமக்க இறுவரை 
காணின் கிழக்காம் தலை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பகைவர்க்கு
முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம்
வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

மு.வ உரை:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

ADVERTISEMENTS
Translation:
If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there.

ADVERTISEMENTS
Explanation:
If
one meets his enemy, let him show him all respect, until the time for
his destruction is come; when that is come, his head will be easily
brought low.