நெஞ்சொடுபுலத்தல்

திருக்குறள்:
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய 
நெஞ்சம் தமரல் வழி.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

மு.வ உரை:
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம்
உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர்
தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி
என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது
எளிது', என்பதாம்.).

மணக்குடவர் உரை:
தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து, ஏதிலார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?.

Translation:
A trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own!.

ADVERTISEMENTS
Explanation:
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.