நெஞ்சொடுபுலத்தல்

திருக்குறள்:
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே 
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில்
நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப்
போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

மு.வ உரை:
நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?.

சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே
தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி
இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத்
துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு
நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி
அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு
எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். (அப்பெற்றிப்பட்டன - புலக்கும்
திறங்கள். 'காண' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.
முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின்,
இவ்வாறு கூறினாள்.).

மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.

Translation:
'See, thou first show offended pride, and then submit,' I bade;
Henceforth such council who will share with thee my heart?.

ADVERTISEMENTS
Explanation:
O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை