புணர்ச்சிவிதும்பல்

திருக்குறள்:
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் 
பழிகாணேன் கண்ட இடத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும்.
கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற
குற்றத்தை மறந்து விடுகிறேன்.

மு.வ உரை:
மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப்
போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து
விடுகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக்
காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும்,
நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் -
முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு
காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு
காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன்.
(கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப
முடியாது' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக்
காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக்
கண்டிலேன். இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம்
யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

Translation:
The eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh.

ADVERTISEMENTS
Explanation:
Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.