புணர்ச்சிவிதும்பல்

திருக்குறள்:
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து 
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.

மு.வ உரை:
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

சாலமன் பாப்பையா உரை:
தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை
எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என்
மனம் சென்றது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக்
காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே
சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு
அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும்
ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின்
'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது
முடிந்ததில்லை' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே
அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது
கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

Translation:
My friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain.

ADVERTISEMENTS
Explanation:
O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை