நெஞ்சொடுகிளத்தல்

திருக்குறள்:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் 
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?.

மு.வ உரை:
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.

சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , ஆற்றாமை மீதூரத் தனக்கு ஓர் பற்றுக்கோடு காணாத்
தலைமகள் தன் நெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல் . இஃது , உறுப்புக்கள்
தம் நலனழிந்தவழி நிகழ்வதாலின் , உறுப்பு நலன் அழிதலின்பின் வைக்கப்பட்டது.]
(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும்
மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து
ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது
யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். (எவ்வம் - ஒன்றானும் தீராமை.
உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள்,
'எனைத்தொன்றும்' என்றாள்.).

மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தாவது
யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய். இஃது ஆற்றுதலரி தென்று
கூறியது. இவையெல்லாம் தனித்தனி சிலகூற்றென்று கொள்ளப்படும்.

Translation:
My heart, canst thou not thinking of some med'cine tell,
Not any one, to drive away this grief incurable?.

ADVERTISEMENTS
Explanation:
O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?.