நினைந்தவர்புலம்பல்

திருக்குறள்:
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் 
அளியின்மை ஆற்ற நினைந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர்
இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால்
என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

மு.வ உரை:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

சாலமன் பாப்பையா உரை:
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும்
தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து -
முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை
மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது.
(அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு
நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என
வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று;
அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு).

மணக்குடவர் உரை:
நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும்
நினைந்து எனது உயிர் அழியா நின்றது. இது தலைமகன் நினையானென்று தெரிந்து
தலைமகள் தோழிக்குக் கூறியது.

Translation:
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,
Who said erewhile, 'We're one for evermore'.

ADVERTISEMENTS
Explanation:
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.