நலம்புனைந்துரைத்தல்

திருக்குறள்:
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் 
பலர்காணத் தோன்றல் மதி.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின்
முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால்
(அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ
தோன்றாது இருப்பதே மேல்.

மு.வ உரை:
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

சாலமன் பாப்பையா உரை:
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம்
ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க
வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத்
தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின்,
ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு
அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.).

மணக்குடவர் உரை:
மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை
ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக. இது மதி ஒளியும் வடிவும்
ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.

Translation:
If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see!.

ADVERTISEMENTS
Explanation:
O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.