புணர்ச்சிமகிழ்தல்

திருக்குறள்:
வேட் ட பொழுதின் அவையவை 
போலுமே தோட் டார் கதுப்பினாள் 
தோள்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து
இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின்
தோள்கள் இன்பம் வழங்குகின்றன.

மு.வ உரை:
மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

சாலமன் பாப்பையா உரை:
நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே
இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது
கூடினாலும் இன்பம் தருகின்றன.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) வேட்ட பொழுதின்
அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல்
விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல
இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப்
புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலின் யுடையாள் தோள்கள். (தோடு:
ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே
நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை
பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.).

மணக்குடவர் உரை:
காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும்,
தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள். தோட்டாழ்கதுப்பு-
புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல்.

Translation:
In her embrace, whose locks with flowery wreaths are bound,
Each varied form of joy the soul can wish is found.

ADVERTISEMENTS
Explanation:
The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).