குறிப்பறிதல்

திருக்குறள்:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!.

மு.வ உரை:
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள்
கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று;
அதனினும் மிகும். (தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று
நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி
நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது'
என்றும் கூறினான்.).

மணக்குடவர் உரை:
என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய
நோக்கம், வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று; பெரிது. தலைமகள் தலைமகன்
காணாமைநோக்குதலின் அது களவாயிற்று.

Translation:
The furtive glance, that gleams one instant bright,
Is more than half of love's supreme delight.

ADVERTISEMENTS
Explanation:
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).