தகையணங்குறுத்தல்

திருக்குறள்:
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு 
அணியெவனோ ஏதில தந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும்
இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள்
எதற்காக?.

மு.வ உரை:
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை:
பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில்
நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை
அணிவித்திருப்பது எதற்காகவோ?.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும்
நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து
நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய
இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன
பயனுடைத்து? (மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும்
எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய
வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு
இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.

Translation:
Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?.

ADVERTISEMENTS
Explanation:
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?.