இரவு

திருக்குறள்:
 இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் 
அவர்பழி தம்பழி அன்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கொடுக்கக்கூடிய
தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று
சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.

மு.வ உரை:
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

சாலமன் பாப்பையா உரை:
ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது
என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால்
பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

ADVERTISEMENTS
Translation:
When those you find from whom 'tis meet to ask,- for aid apply;
Theirs is the sin, not yours, if they the gift deny.

ADVERTISEMENTS
Explanation:
If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.