குடிசெயல்வகை

திருக்குறள்:
 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் 
நல்லாள் இலாத குடி.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.

மு.வ உரை:
துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல
பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச்
சாயும் மரம் போல் விழுந்து விடும்.

ADVERTISEMENTS
Translation:
When trouble the foundation saps the house must fall,
If no strong hand be nigh to prop the tottering wall.

ADVERTISEMENTS
Explanation:
If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.