நாணுடைமை

திருக்குறள்:
 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் 
பிணிஅன்றோ பீடு நடை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நடந்த
தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு
அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக
நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.

மு.வ உரை:
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

சாலமன் பாப்பையா உரை:
நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

ADVERTISEMENTS
Translation:
And is not shame an ornament to men of dignity?
Without it step of stately pride is piteous thing to see.

ADVERTISEMENTS
Explanation:
The Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).